ஏர் இந்தியா எச்சரிக்கை மணி

ஏர் இந்தியா விமான நிறுவனத்தை சமீபத்தில் கையகப்படுத்தியது டாடா குழுமம்.  கடந்த  திங்கட்கிழமை துருக்கிய ஏர்லைன்ஸின் முன்னாள் தலைவரான இல்கர் அய்சி  என்பவரை ஏர் இந்தியாவின் புதிய தலைவராக நியமித்தது. ஆனால், அய்சி குறித்து வெளியாகும் அவரின் பின்புலத் தகவல்கள் அவ்வளவு திருப்திகரமாக இல்லை. அய்சி 1990களில் துருக்கிய அதிபர் தையிப் எர்டோகனின் ஆலோசகராக பணியாற்றியுள்ளார்.  மேலும், யாசின் அல் காதி போன்ற அல்கொய்தா பயங்கரவாத தலைவர்களுடனும் நெருக்கமாக இருந்துள்ளார். துருக்கி அதிபர் எர்டோகன் பாரதத்திற்கு எதிராக செயல்பட்டு வருபவர். சீனா, பாகிஸ்தானுடன் இணைந்து பல பயங்கரவாத குழுக்களுக்கு நிதியுதவி செய்து வருபவர். பாரதத்தில் பயிலும் முஸ்லிம் மாணவர்களை கல்வி சுற்றுலா என்ற பெயரில் துருக்கிக்கு அழைத்து பயிற்சி அளிப்பவர். உலக அளவில், ஒட்டோமென் முஸ்லிம் சாம்ராஜ்ஜியம் அமைக்கப்பட வேண்டும் என கூறிவருபவர் என்பது சிந்திக்கத்தக்கது.