தஞ்சை மாணவி லாவண்யா மதமாற்றத் தற்கொலை வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்நிலையில், இந்த உத்தரவைத் தொடர்ந்து, தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாலை வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “மதமாற்றத்தால் உயிரிழந்த லாவண்யாவின் வழக்கை சி.பி.ஐ விசாரிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழக பா.ஜ.க எப்போதும் நியாயத்தின் பக்கம் உள்ளது. தி.மு.க அரசு பொய் பிரசாரம் மேற்கொண்டதற்கு மன்னிப்பு கேட்குமா? இனிமேலாவது உயிரிழந்த மாணவியின் பெற்றோரை முதலமைச்சர் ஸ்டாலின் சந்திப்பாரா?” என்ற கேள்வியை எழுப்பியுள்ளார்.