பா.ம.க தலைவர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘தமிழகத்தில் மருத்துவக் கலந்தாய்வில் பங்கேற்ற மாணவர்களுக்கு கல்லூரிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. வரும் 16-ஆம் தேதிக்குள் அனைத்து மாணவர்களும் கல்லூரிகளில் சேரும்படி தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. தாமதத்தை தவிர்ப்பது வரவேற்கத்தக்கதுதான். ஆனால் தமிழக தனியார் மருத்துவக் கல்லூரிகள், நிகா்நிலைப் பல்கலைக்கழகங்களில் 50 சதவீத மாணவா்களுக்கு அரசு மருத்துவக் கல்லூரி கட்டணமான ரூ. 13,610 மட்டுமே வசூலிக்க வேண்டும் என்ற தேசிய மருத்துவ ஆணையத்தின் அறிவிப்பை அரசாணையாக வெளியிடுவதில் இதுபோன்ற அவசரம் ஏன் இல்லை? இது தனியார் மருத்துவக் கல்லூரிகளின் கட்டணக் கொள்ளையை ஊக்குவிக்கும்’ என்று தெரிவித்துள்ளார்.