பாரதத்தின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ, இன்று பி.எஸ்.எல்.வி சி 52 என்ற ராக்கெட் மூலம் இ.ஓ.எஸ் 04 என்ற செயற்கைக்கோளை விண்ணில் ஏவுகிறது. ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தின் தளத்தில் இருந்து இன்று காலை 5.59 மணிக்கு ராக்கெட் விண்ணில் ஏவப்படுகிறது. இந்த ஆண்டில் விண்வெளியில் செலுத்தப்படும் முதல் செயற்கைக்கோள் இதுவாகும். இந்த ராக்கெட்டில் 1,710 கிலோ எடை கொண்ட இ.ஓ.எஸ் – 04 என்ற பூமியை கண்காணிக்க உதவும் செயற்கைக்கோள், ஒரு மாணவரின் செயற்கைகோள் உள்ளிட்ட 3 செயற்கைகோள்கள் இடம்பெற்றுள்ளது.