உத்தரப் பிரதேசம் மொராதாபாத் மாவட்டத்தில் உள்ள மசூம்பூர் கிராமத்தில் வசிக்கும் மோனு என்ற ஹிந்து இளைஞன் லாரி ஓட்டுனராக உள்ளார். இவர் ஒரு முஸ்லிம் பெண்ணை காதலித்தார். இதற்கு எதிர்ப்புத் தெரிவித்த அந்த பெண்ணின் சகோதரர்களால் மோனுவை கழுத்தை நெரித்துக் கொன்றுள்ளனர். சோனுவின் சகோதரர் மான்டி அளித்த புகாரின் அடிப்படையில் வாசிம், நசீம் என்பவர்களை கைது செய்து காவல்துறை வழக்குப்பதிவு செய்தது. இருவரும் கொலை செய்ததை ஒப்புக்கொண்டனர். இவ்வழக்கில் முறையாக விசாரணை நடத்தாமல் கொலையில் தொடர்புள்ள சிலரை காவல்துறையினர் விடுவிக்க முயற்சிப்பதாக, சோனுவின் குடும்பத்தினரும் கிராம மக்களும் சந்தேகிக்கின்றனர். அந்த பெண்ணின் தந்தை யாசின் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். ஆனால் அவர், மோனுவிடம் ரூ. 1.45 லட்சம் கடன் பெற்றிருந்தார். இதற்காகவும் இக்கொலை நடந்திருக்கலாம் என மக்கள் சந்தேகிக்கின்றனர். இவ்விவகாரத்தால் கிராமத்தில் இரு சமூகத்தினருக்கும் இடையே பதற்றம் நிலவி வருகிறது.