தமிழகத்தில் வருகிற 19ம் தேதி நகர்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக, தி.மு.க இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், கும்பகோணம் மாநகராட்சி போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்வதற்காக சென்றபோது பள்ளிய அக்ரஹாரம் பகுதியில், கரந்தை தமிழ்ச் சங்கத்தை சேர்ந்த 20க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள், தி.மு.க கொடி ஏந்தியபடி, பள்ளி சீருடையில் நின்று அவரை வரவேற்றனர். இது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சை கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் செயலாளர் ராமநாதன் தி.மு.க நிர்வாகி. இவரது பேரன் செந்தமிழ்செல்வன் தற்போது மாநகராட்சி தேர்தலில் 1வது வார்டில் போட்டியிடுகிறார். அவருக்கு ஆதரவாக பிரச்சாரத்தில் மாணவர்களை ஈடுபடுத்தியதாக புகார் எழுந்துள்ளது.