கேரளாவில் ஒரு ஷரியா நகரம்

சர்ச்சைக்குரிய கேரள முஸ்லிம் மதபோதகர் முஜாஹித் பாலுசேரி, ‘அடுத்த பத்து ஆண்டுகளில் கேரளாவை முஸ்லிம் நாடாக மாற்ற முடியும்’  என்று பகிரங்கமாக அறிவித்திருந்தார். இந்நிலையில் அவருக்கெதிரான ஒரு குழு, கேரளாவில் ஒரு பிரத்யேக  இஸ்லாமிய அரசின் முன்மாதிரியை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது.

ஷரியா சட்டப்படி வாழ விரும்பும் முஸ்லிம்களுக்காக பாரதத்தில் முதல்முறையாக கேரளாவின் கோழிக்கோடு-வயநாடு எல்லையில் ஒரு டவுன்ஷிப்பை அவர்கள் கட்டமைத்து வருகின்றனர். ‘அறிவு நகரம்’  (நாலெட்ஜ் சிட்டி) என்ற பெயரில் இங்கு அதிநவீன வசதிகள், பள்ளி, கல்லூரிகள், யுனானி மருத்துவக் கல்லூரி, சொகுசு விடுதி, சொகுசு குடியிருப்புகள், விளையாட்டு மைதானங்கள்  உள்ளிட்ட அனைத்து வசதிகளுடன் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது.

அங்கு வாழும் முஸ்லிம் அல்லாதவர்களின் சொத்துக்கள் அதிக விலைக்கு வாங்கப்படுகின்றன. இதனால், பலர் தங்களின் சொத்துக்களை விற்று விட்டு வெளியேறிவிட்டனர். அவர்கள் அமைக்கவிருப்பது ‘ஹலால் பூங்கா’ என்பதை அறியாத பெரும்பாலான பூர்வீக ஹிந்து குடும்பங்களுக்கும் கிறிஸ்தவ குடும்பங்களுக்கும் இத்திட்டத்தின் பயங்கரம் இன்னும் விளங்கவில்லை. இத்திட்டம், தங்கள் வாழ்க்கையில் நல்ல மாற்றங்களை ஏற்படுத்தும் என்ற பொய்யான எதிர்பார்ப்புடன் வாழ்கின்றனர்.

ஹலால் பூங்கா என்பது ஒரு முஸ்லீம் நாட்டின் சிறு மாதிரி வடிவமாகும். இது முஸ்லிம்கள், முஸ்லிம் மத நம்பிக்கைகள், பழக்கவழக்கங்களைப் பின்பற்றி வாழ வேண்டும். பள்ளி, கல்லூரி, குடியிருப்புகளில் இஸ்லாமிய ஷரியா சட்டங்கள், நடைமுறைகள் பின்பற்றப்படும். மேற்கு தொடர்ச்சி மலைக்கு அருகில் அமைக்கப்பட்டு வரும் இந்த ஹலால் பூங்காவின் கட்டுமான நடவடிக்கைகள் சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும். இத்திட்டத்திற்கு நிதியளிப்பதற்காக பல விளம்பர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பல பெரிய முஸ்லிம்  நிறுவனங்கள் நிதியுதவி அளிக்க முன்வந்துள்ளன.

நாலெட்ஜ் சிட்டியில் ஷரியா சிட்டி இயங்கி வருவதாக நாலெட்ஜ் சிட்டி இணையதளமே கூறுகிறது. இந்நிலையில், இத்திட்டம் முழுமையாக செயல்படுத்தப்பட்டால், அது, சமூக அரசியல் சூழலில் பயங்கரமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பது திண்ணம்.