அரசியலமைப்பு ஒவ்வொரு தனிநபருக்கும் அவரவர் மதத்தை கடைப்பிடிக்கும் அடிப்படை உரிமையை வழங்குகிறது. எனினும், அதனை தவறாக பயன்படுத்தி மதமாற்றம் செய்வதை ஏற்கமுடியாது. சமீப காலமாக, பிற மதத்தினரை குறிப்பாக ஹிந்து மதத்தினரை ஏமாற்றி, வசீகரித்து, ஆசை காட்டி, குணப்படுத்துவதாகக் கூறி, மோசடி செய்து, கட்டாயப்படுத்தி, செல்வாக்கு காட்டி, காதலித்து, திருமணம் செய்து மதமாற்றம் செய்வது அதிகரித்து வருகிறது. இதன் மூலம், தங்கள் மதத்தின் பலத்தை அதிகரிக்கச் செய்யும் நிகழ்ச்சி நிரலுடன், சிலர் தொடர்ந்து முயற்சித்து வருகின்றனர். இவர்களுக்கு இதற்காக உள்நாட்டு, வெளிநாட்டு நிதியுதவிகள், அரசியல் செல்வாக்கு உட்பட பல உதவிகள் கிடைக்கின்றன. இதனால் பல அப்பாவிகள் பாதிக்கப்படுகின்றனர். பட்டியலின, பழங்குடியினத்தவர், பெண்கள், குழந்தைகள் இவர்களது வலையில் சிக்குகின்றனர். இதனைத் தடுக்கும் விதமாக, பல மாநில அரசுகள் மதமாற்றத் தடைசட்டம் இயற்றி வருகின்றன. அவ்வகையில், ஹரியானா அரசு மதமாற்றத் தடுப்புச் சட்டத்தை விரைவில் நிறைவேற்றவுள்ளது. இதற்கான வரைவு மசோதாவுக்கு ஹரியானா அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதனையடுத்து இது விரைவில் சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.