சிறுவனுக்கு சீன சித்ரவதை

அருணாச்சல பிரதேசத்தை சேர்ந்த  சிறுவன் மிரம் தரன், தன் நண்பன் ஜானி யய்யிங் உடன் வேட்டையாட சென்றார். எல்லைப் பகுதியில் அவர்களை சீன ராணுவத்தினர் மடக்கிப் பிடித்தனர். ஜானி யய்யிங் அவர்களிடம் இருந்து தப்பித்தான். மிரம் தரனை சீன வீரர்கள் கடத்திச் சென்றனர். இதனையடுத்து நமது ராணுவத்தினர் ‘ஹாட்லைன்’ எனப்படும் நேரடி தொலைத் தொடர்பு மூலம் சீன ராணுவ அதிகாரிகளுடன் பேசினர். மிரம் தரனை திரும்ப ஒப்படைப்பதாக சீன ராணுவம் உறுதியளித்தது. அதன்படி, கடந்த 27ம் தேதி, மிரம் தரன் ஒப்படைக்கப்பட்டான். தன் மகனுக்கு, ‘மின்சார ஷாக்’ கொடுத்தும் எட்டி உதைத்தும் சீன வீரர்கள் துன்புறுத்தியதாகவும் தன் மகன் இன்னும் அந்த அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை என்றும் சிறுவனின் தந்தை ஒபாங் தரன் தற்போது புகார் அளித்துள்ளார்.