உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகத்திற்கு காங்கிரஸ் தலைவர் கன்னையா குமார் சென்றார். காங்கிரஸ் வேட்பாளர் சதாப் ஜாஃபரின் வேட்புமனு தாக்கலில் பங்கேற்க கன்னையா குமாரும் சில காங்கிரஸ் தலைவர்களும் அங்கு சென்றபோது, கன்னையா குமார் மீது மை வீசப்பட்டது. ‘கன்னையா குமார் ஒழிக’ என்று கோஷம் எழுப்ப்பட்டது. இதனைத் தொடர்ந்து, காங்கிரஸ் அலுவலகத்திற்குள் இரு பிரிவினரிடையே கைகலப்பு ஏற்பட்டது. கட்சி அலுவலகத்தில் சொந்தக் கட்சித் தொண்டர்களாலேயே அவர் தாக்கப்பட்டது காங்கிரசார் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தாக்குதலில் இருந்து கன்னையா காப்பாற்றப்பட்டார். மை வீசியவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். இதனை செய்தவர் தேவன்ஷ் வாஜ்பாய் என அடையாளம் காணப்பட்டுள்ளார். முன்னதாக கம்யூனிச கட்சியில் இருந்த கன்னையா குமார், சமீபத்தில்தான் காங்கிரசில் இணைந்தார் என்பதும் அப்பகுதி காங்கிரஸ் வேட்பாளர் 2019ல் சி.ஏ.ஏ எதிர்ப்பு வன்முறை போராட்டத்தில் பங்கேற்றதற்காக கைது செய்யப்பட்டு ஜாமீனில் உள்ளவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.