யாரை காப்பாற்றுகிறார் ஸ்டாலின்?

அரியலுார் மாணவி மைக்கேல்பட்டி துாய இருதய மேல்நிலைப் பள்ளி நிர்வாகத்தின் மதமாற்ற கொடுமையால் உயிரிழந்தார். இது குறித்து சி.பி.ஐ. விசாரிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது, தேசிய குழந்தைகள் ஆனையமும் விசாரித்து வருகிறது. இந்நிலையில், இதுகுறித்து விசாரணை நடத்தி அறிக்கை தருவதற்காக சந்தியாரே (மத்திய பிரதேசம்), முன்னாள் எம்.பி. விஜயசாந்தி (தெலுங்கானா), சித்ரா தாய்வாக் (மஹாராஷ்டிரா), கீதா விவேகானந்தா (கர்நாடகா) ஆகியோர் அடங்கிய குழுவை பா.ஜ.க தேசிய தலைவர் ஜே.பி. நட்டா அமைத்தார். இக்குழுவினர் மாணவியின் தந்தை, சித்தி, தம்பிகளிடம் விசாரித்தனர். தஞ்சை ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவரிடமும் இதுகுறித்து கேட்டறிந்தனர். பின்னர் பேசிய விஜயசாந்தி, ‘கடந்த ஒன்றரை ஆண்டுகளாக மதம் மாற மாணவியை வற்புறுத்தியுள்ளனர். அவர் மறுத்ததால் ‘டார்ச்சர்’ செய்துள்ளனர். அதனால்தான் மாணவி தற்கொலை முடிவெடுத்துள்ளார். மதச்சார்பற்ற கட்சி எனக் கூறி மதத்தின் பெயரில் அரசியல் செய்கிறது தி.மு.க. இப்பிரச்னையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் ஏன் மௌனமாக உள்ளார், யாரை காப்பாற்ற முயற்சிக்கிறார்? மாணவியின் தந்தையே தி.மு.க’காரர் தான். ஆனால், அவருக்கே நியாயம் கிடைக்கவில்லை’ என கூறினார்.