உத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த மௌவுலானா தவுஹீர் ரசா கான், இத்தேஹத் இ மில்லத் கௌன்சில் என்ற கட்சியை நடத்தி வருகிறார். தற்போதைய தேர்தலில் இக்கட்சி காங்கிரசுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்கிறது. இந்நிலையில், இவரது மருமகள் நிதா கான், பா.ஜ.கவில் இணைந்தார். இது அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து நிதா கான் கூறுகையில், “என்னுடன் காங்கிரஸ், சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் உல்ளிட்ட கட்சித் தொண்டர்கள் பலரும் பா.ஜ.கவில் இணைந்துள்ளனர். முத்தலாக் முறையை ரத்து செய்து முஸ்லிம் பெண்கள் மத்தியில் நம்பிக்கையை விதைத்தவர் பிரதமர் மோடி. அவரது சிறப்பான ஆட்சியின் கீழ் தேசம் வளர்ச்சிப் பாதையில் செல்கிறது. முஸ்லிம் பெண்கள் பா.ஜ.கவுக்கு வாக்களிப்பார்கள் என்று நம்புகிறோம். இம்முறையும் உ.பி’யில் பா.ஜ.க அமோக வெற்றி பெறும். என்னுடைய மாமனார், பெண்கள் உரிமை குறித்து வெளியே மட்டுமே பேசி வருகிறார். ஆனால் தன்னுடைய வீட்டில் உள்ள பெண்களின் உரிமை குறித்து அவர் சிந்தித்ததே இல்லை” என்றார்.