தமிழக அரசு சரியில்லை

பிசினஸ் லைன் கவுண்ட்டவுன் டு பட்ஜெட் 2022ல் சிறப்புரையாற்றினார் மத்திய நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி.  போல் அப்போது, பற்ற மாநிலங்களைப் போல, தமிழகத்தில் பெரிய அளவிலான சாலைத் திட்டங்களை ஏன் மேற்கொள்ளவில்லை என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், ‘தமிழகத்தில் சாலைத் திட்டங்களை நிறைவேற்றவும் அதற்கான நிதியை அளிக்கவும் மத்திய அரசு தயாராக இருக்கிறது. ஆனால், தமிழக அரசு, அதற்கான அனுமதிகளை தருவது, நிலங்களை பெற்றுத்தருவது, சுற்றுச்சூழல், வன அனுமதி, மூலப்பொருட்களை தடையின்றி வழங்குவது என அனைத்திலும் காலதாமதம் செய்கிறது. தமிழக முதல்வர் ஸ்டாலின் இந்த பிரச்னைகளை தீர்க்க வேண்டும். கர்நாடக அரசு இதில் வேகமாக செயல்படுகிறது. கேரள முதல்வர் பினராயி விஜயன்கூட விரைவாக முடிவெடுக்கிறார். நிலம் கையகப்படுத்துவதை விரைவுபடுத்த உதவுகிறார். ஆனால், தமிழகம்தான் இதில் தாமதம் செய்கிறது என்றார்.