வளர்ந்து வரும் மத வெறுப்பு

உலக பயங்கரவாத எதிர்ப்பு கவுன்சிலின் சர்வதேச பயங்கரவாத எதிர்ப்பு மாநாட்டில் உரையாற்றிய பாரதத்திற்காக தூதுவர் திருமூர்த்தி, ‘மத துவேஷம் என்பதை ஐ.நா சபை, இதுவரை இஸ்லாமோஃபோபியா, கிறிஸ்டியோபோபியா மற்றும் யூத எதிர்ப்பு என மூன்று ஆபிரகாமிய மதங்களை அடிப்படையாகக் கொண்டு மட்டுமே சிந்தித்து வந்தது. ஆனால், தற்போது உலக அளவில் வளர்ந்து வரும் ஹிந்து, பௌத்தம், சீக்கியம் உள்ளிட்ட மதங்களுக்கு எதிரான உலகளாவிய மத துவேஷங்களை கருத்தில் கொள்ளவில்லை. இதனை பாரதம் பலமுறை வலியுறுத்தி வந்துள்ளது. ஐ.நா சபையும் அதன் உறுப்பு நாடுகளும் இதனையும் கருத்தில் கொள்வது அவசியம். இவற்றிற்கு எதிரான மத வெறுப்புகள் பல நாடுகளில் ஆழமாக  வேர்விட்டு பரவத் துவங்கிவிட்டன. பயங்கரவாத அச்சுறுத்தல் உலகளாவியது என்றும் அதற்கு உலகளாவிய பதில் தேவை. ஆப்கானிஸ்தானில் நடைபெறும் சம்பவங்களுக்கு சரியான நடவடிக்கைகள் எடுக்கப்படாவிட்டால், அது உலகின் பிற பகுதிகளில் உள்ள பயங்கரவாதக் குழுக்களுக்கு ஊக்கமளிக்கும்’ என தெரிவித்தார்.