வாக்கை மறந்த ராகுல்

ராஜஸ்தானில் விவசயிகள் தங்கள் விவசாய கடனைத் திருப்பிச் செலுத்தத் தவறியதால், அவர்களின் விவசாய நிலங்களை வங்கிகள் ஏலம் விட்டன. இதனை எதிர்த்து தௌசா கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகள் அம்மாநில முதல்வர் முதல்வர் அசோக் கெலாட்டின் இல்லத்திற்கு வெளியே கூடி கடனை தள்ளுபடி செய்யக்கோரி போராட்டம் நடத்தினர். ராஜஸ்தானை ஆளும் காங்கிரஸ் தலைமையிலான அரசை கண்டித்து கோஷம் எழுப்பினர். 2018ல் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, தாங்கள் பதவியேற்ற 10 நாட்களுக்குள் விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்வதாக உறுதியளித்தார். ஆனால், பதவிக்கு வந்து 2 ஆண்டுகள் முடிவடைந்துவிட்ட நிலையிலும் காங்கிரஸ் அரசு, சொன்னபடி கடன்களை தள்ளுபடி செய்யவில்லை. விவசாய நிலங்களை விற்பதன் மூலம் விவசாயிகள் வயிற்றில் அடிக்கிறது அரசு, காங்கிரஸ் எங்கள் வாழ்க்கையை சீரழித்து விட்டது. ராகுல் வழங்கிய வாக்குறுதிகளை மீறிவிட்டார். கடன்களால் நாங்கள் இறக்க வேண்டும் என்று அரசாங்கம் விரும்புகிறதா? என போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் கண்டனம் தெரிவித்தனர்.