மதமாற்றத்தை எதிர்த்து தற்கொலை செய்துகொண்ட தஞ்சை பள்ளி மாணவி லாவண்யா விவகாரத்தில், ‘மாணவியை மதமாற்றம் செய்ய கட்டாயப்படுத்தியதாக எந்த தகவலும் இல்லை’ என தஞ்சை எஸ்.பி. ரவளி பிரியா தவறான விளக்கம் அளித்து வழக்கை திசைதிருப்ப பார்த்துள்ளார். இதுகுறித்து கருத்துத் தெரிவித்த முன்னாள் சி.பி.ஐ இயக்குனர் எம். நாகேஷ்வர ராவ், ‘ஒரு மாணவி இறக்கும் தருவாயில் வீடியோ வாக்குமூலம் அளித்துள்ளார். இதன் மீது தஞ்சை எஸ்.பி. நடவடிக்கை எடுக்க வேண்டியது அவரின் கடமை. குற்றம் சாட்டப்பட்டவர்களைக் காப்பதற்காக அந்த எஸ்.பி மீது நடவடிக்கை எடுக்க முடியும். சி.ஐ.டி அல்லது சி.பி.ஐ மூலம் முழுமையான பாரபட்சமற்ற விசாரணை நடத்தப்பட்டு லாவண்யாவுக்கு நீதி வழங்கப்பட வேண்டும்’ என தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக, தேசிய குழந்தைகள் ஆனையம் காவல்துறைக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.