நமது நாட்டின் விடுதலைக்குப் பாடுபட்டவர்களில் மறக்க முடியாதவர்கள் ராஷ் பிஹாரி போஸ், நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் இருவரும். ராஷ் பிஹாரி போசின் வீரமயமான வாழ்க்கை பலரும் அறியாதது. நேதாஜிக்கு ஆதர்ஷமாகத் திகழ்ந்தவர் ராஷ் பிஹாரி போஸ்.
வினோத் பிஹாரி போஸின் மகனான ராஷ் பிஹாரி போஸ். இளமையிலேயே விடுதலைப் போரில் இணைந்தார். குதிராம் போஸ் நடத்திய குண்டுவீச்சால் ஆங்கிலேய அதிகாரியின் குடும்பத்தினர் கொல்லப்பட்டதை அடுத்து அரவிந்தர் கைது செய்யப்பட்டார். ராஷ் பிஹாரி
போஸ் தப்பி டேராடூன் சென்றார். அமரேந்திர சட்டர்ஜியுடன் ஏற்பட்ட நட்பால் யுகாந்தர் புரட்சிக் குழு உறுப்பினரானார். அங்கிருந்தே பாரத விடுதலைக்கு பாடுபட்டார்.
முதல் உலகப் போரைப் பயன்படுத்தி, பாரதத்திலிருந்து ஆங்கிலேயரை விரட்ட ஜெர்மனி, அமெரிக்கா உள்ளிட்ட மக்கள், அமெரிக்காவில் இயங்கிய கதர் கட்சி உதவியுடன், இந்தியாவிலிருந்த ஆங்கிலேயப் படைக்குள் ஊடுருவி தாக்குதல் நடத்த திட்டம் தீட்டினார். ஆனால், ஒற்றர்கள் உதவியுடன் ஆங்கிலேய அரசு, புரட்சிக்கு முன்னதாகவே ஊடுருவலை முறியடித்தது. ராஷ் பிஹாரி போஸ் ஜப்பானுக்கு தப்பினார். அங்கு இந்திய சுதந்திர லீக் அமைப்பை தோற்றுவித்தார். நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் ஜப்பானுக்கு சென்றபோது, அவரை வரவேற்று, இந்திய சுதந்திர லீகின் தலைமைப் பொறுப்பை ஒப்படைத்தார் ராஷ் பிஹாரிம் போஸ். ஆசாத் கொடியை அறிமுகம் செய்தார். உலகப்போரில் ஜப்பான் வீழ்ச்சி அடையவே, நமது விடுதலைக் கனவு மூன்று ஆண்டுகள் தள்ளிப்போனது. ராஷ் பிஹாரி போஸும் போரில் கொல்லப்பட்டார். ஜப்பான் அரசு ராஷ் பிஹாரி போஸின் வீரத்தை மெச்சி, அவருக்கு மறைவுக்குப் பிந்தைய ORDER OF RISING SUN என்ற உயர் விருதை வழங்கி கௌரவித்தது.
ராஷ் பிஹாரி போஸின் நினைவு தினம் இன்று