ஜனவரி 26ல் நடைபெறவுள்ள குடியரசு தின விழாவை சீர்குலைக்க பயங்கரவாதிகள் முயற்ச்சிக்கின்றனர். பிரதமர் மோடியின் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது என சில நாட்களுக்கு முன் உளவுத்துறை எச்சரித்து இருந்தது. இந்நிலையில், சீக் பார் ஜஸ்டிஸ் என்ற காலிஸ்தான் பயங்கரவாதக்குழு தலைவனும் பர்தா அணிந்த பெண் ஒருவரும் இணைந்து வெளியிட்டுள்ள வீடியோவில், காஷ்மீரில் உள்ள பயங்கரவாதிகள் காஷ்மீரைவிட்டு வெளியேறி டெல்லிக்கு செல்ல வேண்டும். அங்கு பிரதமர் மோடி குடியரசு தினத்தன்று கொடியேற்றுவதை தடுக்க வேண்டும். எங்கள் காலிஸ்தான் கொடி அங்கு உயர்த்திப் பிடிக்கப்படும்போது உங்கள் காஷ்மீர் கொடியை நீங்கள் உயர்த்த வேண்டும். இப்போது இல்லை என்றால் எப்போதும் இல்லை. பெண்களும் இதில் கலந்துகொள்ள வேண்டும். இப்போது சுதந்திரப் போராளிகளின் காலம். இப்போது காஷ்மீர் மக்களுக்கு நேரம் வந்துவிட்டது என பயங்கரவாதத்தை தூண்டும் வகையில் பேசியுள்ளனர். அந்த வீடியோவில் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்ட பயங்கரவாதி புர்ஹான் வானி உட்பட சில பயங்கரவாதிகளின் படமும் இடம்பெற்றுள்ளது.