புத்தகம் வெளியீடு

ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக சங்கத்தின் தலைவர் டாக்டர் மோகன் பகவத், ரங்கஹரி சமீபத்தில் எழுதிய வியாச பாரதத்தில் பீஷ்மரே என்ற மளையாள நூலை வெளியிட்டார். புத்தக வெளியீட்டு விழா கொச்சி மாதவ நிவாஸில் நடைபெற்றது. மேற்கு வங்கத்தின் முன்னாள் தலைமை நீதிபதி தோட்டத்தில் பி. ராதாகிருஷ்ணன், புத்தகத்தின் முதல் பிரதியை பெற்றுக் கொண்டார். குருக்ஷேத்ர பிரகாஷனால் இந்த புத்தகம் வெளியிடப்பட்டுள்ளது. ரங்கஹரி இதற்கு முன் எழுதிய வியாச பாரதத்தில் கிருஷ்ணர், வியாச பாரதத்தில் கர்ணன், வியாஸ் பாரதத்தில் திரௌபதி மற்றும் வியாஸ் பாரதத்தில் நாரதர் ஆகிய புத்தக்கங்கள் வரிசையின் தொடர்ச்சியாக இப்புத்தகம் வெளியிடப்பட்டு உள்ளது. புகழ்பெற்ற மலையாளக் கவிஞர் பேராசிரியர் வி, மதுசூதனன் நாயர் இந்நூலுக்கு முன்னுரை எழுதியுள்ளார்.

1930ம் ஆண்டு ரங்க ஷெனாய் மற்றும் பத்மாவதிக்கு மகனாகப் பிறந்த ஸ்ரீ ஆர் ஹரி, 1944ல் ஆர்.எஸ்.எஸ் அறிமுகம், 1951ம் ஆண்டு முதல் ஆர்.எஸ்.எஸ் பிரசாரகர், அவசரநிலையின் போது, ​​மாறுவேடத்தில் தென்பாரதம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்தல் என பம்பரமாக சுற்றித்திரிந்தார் ரங்கஹரி. 1982ல் கேரளாவில் ஆர்.எஸ்.எஸ்’ன் மாநில பிரசாரகரானார். 1990 முதல் 15 ஆண்டுகளாக சங்கத்தின் அகில பாரதிய பௌதிக் பிரமுக் என பல பொறுப்புகளில் தேசப் பணியை திறம்பட செய்தவர் ரங்கஹரி. மலையாளம், தமிழ், சமஸ்கிருதம், கொங்கனி, மராத்தி, ஹிந்தி, ஆங்கிலம், பெங்காலி, குஜராத்தி, அசாமி ஆகிய பத்து மொழிகளில் நன்கு புலமை பெற்றவர். பல்வேறு மொழிகளில் டஜன் கணக்கான புத்தகங்களை எழுதியுள்ளார். 12 தொகுதிகளாக வெளிவந்த “குருஜி சமாக்ரா” என்ற குருஜியின் முழுமையான படைப்புகளைத் திருத்தியுள்ளார்.