20 மாநிலங்கள் ஒப்புதல்

மின்துறையில் நீடிக்கவல்ல சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டுமென்ற நிபந்தனையுடன் கூடுதலாக கடன் பெறுவதற்கு மாநில அரசுகளை அனுமதிக்கும் திட்டம் ஒன்றை ஜூன் 2021ல் மத்திய நிதியமைச்சகம் தொடங்கியது. இந்தத் திட்டத்தின் அமலாக்க முகமையாக மின்சார அமைச்சகத்தின் ஊரக மின்மயக்கழகம் செயல்படுகிறது. சம்பந்தப்பட்ட மாநிலத்தின் உள்நாட்டு மொத்த உற்பத்தியில் 0.5 சதவீதம் மின்துறை திட்டங்களுக்கு கூடுதல் கடன் பெறுவதற்கான வரம்பாக அனுமதிக்கப்பட்டது. இந்தத் திட்டத்தின் கீழ் சீர்திருத்தங்களுக்கு உறுதிபூண்டால் மாநிலங்கள் கடன் பெறும் தொகையின் அளவு ரூ. 80 ஆயிரம் கோடியாக உயர்த்தப்பட்டது. இந்த நிதியாண்டில், இந்தத் திட்டத்தின் கீழ் பயன் பெற ஏறத்தாழ 20 மாநிலங்கள் ஆர்வம் காட்டியுள்ளன.