காஷ்மீரின் பெரிய சவால்

இந்த ஆண்டு ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் ஹைபிரிட் பயங்கரவாதமும் போதைப்பொருள் கடத்தலும்தான் அமைதி, சட்டம் ஒழுங்கிற்கு பெரும் சவாலாக இருக்கும் என காவல்துறை மூத்த அதிகாரி விஜய் குமார் தெரிவித்துள்ளார். மக்களுடன் மக்களாக கலந்து இருக்கும் பயங்கரவாதிகள் திடீரென வெளிவந்து தாக்குதல் நடத்திவிட்டு மீண்டும் மக்களுடன் மக்களாக கலந்து விடுகின்றனர் இவர்களை தான் ஹைபிரிட் பயங்கரவாதிகள் என அழைக்கின்றனர். இவர்கள்தான் கடந்த ஆண்டில் தீடிரென ஆசிரியர்கள், வியாபாரிகள், காவலர்கள், கடை உரிமையாளர்கள் மீது தாக்குதல் நடத்தி பலரின் உயரிழப்புக்கு காரணமாக இருந்தனர். இது தவிர எல்லைக்கு அப்பால் இருந்து கடத்தி வரப்படும் போதைப்பொருட்கள் ஜம்மு காஷ்மீரில் விற்பனை செய்யபட்டு அதில் கிடைக்கும் பணத்தை கொண்டு பயங்கரவாதிகளின் ஆயுதங்கள் வாங்கபடுகின்றன. கல்லூரி மாணவர்களும் காஷ்மீர மக்களும் போதைப்பொருட்களுக்கு அடிமையாவதோடு மட்டுமின்றி பயங்கரவாதமும் இதனால் வளர்கிறது. இதனை ஒடுக்க ராணுவம் துணை ராணுவ படைகள் மற்றும் ஜம்மு காஷ்மீர் காவல்துறை ஆகியவை இணைந்து தீவிர முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றன என தெரிவித்தார்.