பாரதத்தின் மக்கள்தொகையை மாற்றியமைக்க எல்லை தாண்டிய சட்டவிரோத குடியேற்ற மோசடிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. சட்டவிரோதமாக குடியேறும் முஸ்லிம்களில் ரோஹிங்கியாக்கள், வங்க தேசத்தவர்கள்தான் அதிகம். இவர்களால் முஸ்லிம் மக்கள்தொகை அதிகரிப்பது மட்டுமின்றி பயங்கரவாத செயல்கள், சமூக ஒற்றுமை குலைவு, போன்ற பல தேசவிரோத செயல்கள் நடக்கின்றன. வங்கதேசம், மற்றும் பாகிஸ்தானில் உள்ள சில முக்கிய புள்ளிகளின் உத்தரவின் பேரில் பாரதத்தில் உள்ள சில வங்கதேசத்தை பூர்வீகமாகக் கொண்ட முஸ்லிம்களால் இந்த மோசடிகள் நடத்தப்படுகிறது. இவர்கள், சட்டவிரோதமாக குடியேறும் முஸ்லீம்களின் நுழைவை எளிதாக்குவது, அவர்களுக்கு ஆதார் அட்டைகள், வாக்காளர் அடையாள அட்டைகள், ரேஷன் கார்டுகள், ஓட்டுநர் உரிமம் போன்ற போலி ஆவணங்களையும் சில அரசியல்வாதிகள், அதிகாரிகளின் ஆதரவுடன் ஏற்பாடு செய்கின்றனர். இந்த மோசடிகள் குறித்து முழுமையான விசாரணையை மேற்கொள்ளுமாறு தேசிய புலனாய்வு முகமைக்கு (ஏன்.ஐ.ஏ) மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. ஏன்.ஐ.ஏ உடனடியாக பணியை துவக்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.