அஞ்சலக வங்கி சாதனை

நாட்டில் அனைவருக்கும் நிதிச் சேவை என்ற மிகப் பெரிய முன்முயற்சியை மேற்கொண்டு பிரதமர் மோடி தொடங்கிய முதலாவது டிஜிட்டல் வங்கி சேவையான இந்திய அஞ்சலக வங்கியின் வாடிக்கையாளர் எண்ணிக்கை 5 கோடியை தாண்டியுள்ளது. 3 ஆண்டு காலத்தில் இந்த எண்ணிக்கையை அடைந்துள்ள வங்கி வேகமாக வளர்ந்து வருவதாக தொலைத் தொடர்புத்துறை தெரிவித்துள்ளது. காகிதமற்ற சேவையை அளித்து வரும் அஞ்சலக வங்கி, 1.36 லட்சம் அஞ்சலகங்களில் செயல்பட்டு வருகிறது. இவற்றில் 1.20 லட்சம் கிராமப்புறங்களில் உள்ளன. நாட்டில் உள்ள 2 லட்சத்து 80 ஆயிரம் அஞ்சலக ஊழியர்கள் இந்த சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அடிமட்ட அளவில் டிஜிட்டல் பரிவர்த்தனையை இந்த வங்கி கொண்டு சேர்த்துள்ளது என்றால் அது மிகை அல்ல.