அழுத குழந்தைக்கு பால்

உத்தரப் பிரதேசத்தில் ரயிலில் சுல்தான்பூருக்கு ஒரு பெண் பயணி தனது 8 மாதக் குழந்தையுடன் பயணம் செய்துகொண்டிருந்தார். வழியில் குழந்தை பாலுக்கு அழுதது. சமாதானப்படுத்த முடியவில்லை. ரயிலிலும் பால் கிடைக்கவில்லை. இதனால் தவித்துப்போன அந்தத்தாய், ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயலின் சமூக ஊடக பக்கத்தில் இந்த பிரச்சனை குறித்து எழுதி உதவ முடியுமா என கேட்டார். அடுத்த 23 நிமிடங்களில் கான்பூர் ரயில் நிலையத்தில் சூடான பாலுடன் தயாராக காத்திருந்த ரயில்வே அதிகாரிகள் ரயிலில் அந்த பெண்ணிடம் பாலை கொடுத்துச் சென்றனர். இந்த சம்பவம், அந்த பெண்ணை மட்டுமின்றி சக பயணியரிடையேயும் மகிழ்ச்சியையும் நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தியது. அந்த பெண் ரயில்வே அமைச்சருக்கு தனது நன்றியை தெரிவித்தார்.