அடிப்படை தெரியாத அரசியல்வாதிகள்

டெஸ்லா என்ற எலெக்ட்ரிக் கார்களை தயாரிக்கும் நிறுவனத்தின் அதிபர் எலான் மஸ்க், பாரதத்தில் அவரது கார்களை கொண்டு வந்து விற்க வரி விதிப்பு அதிகம் என்பதாக டுவிட்டரில் செய்தி ஒன்றை போட்டார். அவர் பாரதத்தில் தொழில் துவங்கினால் உரிய சலுகைகள் சட்டப்படி கிடைக்கும் என மத்திய அரசு அறிவித்தது. ஆனால், எலான் மஸ்க் பாரதத்தில் உற்பத்தி செய்வதற்கு வழி தேடாமல், சீனாவில் தனது கார்களை தயாரித்து அவற்றை இங்கு கொண்டு வந்து விற்கவே ஆசைப்படுகிறார். அதற்கு வரியை குறைக்க வேண்டும் என மத்திய அரசை நிர்பந்திக்கிறார். ஆனால், எலான் மஸ்க் கொடுக்கும் மறைமுக நிர்பந்தம், உலகப் பொருளாதார வர்த்தகம், உள்நாட்டு வரிவிதிப்பு, மத்திய அரசு அனுமதி குறித்த புரிதலோ மேக் இன் இந்தியா, சுயசார்பு பாரதம் போன்ற தேசத்தை முன்னேற்றும் திட்டங்கள் குறித்த அடிப்படைகளோ தெரியாத பல மாநில அரசியல்வாதிகள் (குறிப்பாக, தமிழகம், தெலுங்கானா, பஞ்சாப், மகாராஷ்டிரா, மேற்கு வங்கம், உட்பட பல மாநிலங்கள்) எங்கள் மாநிலத்தில் உங்கள் வியாபாரத்தை துவக்குங்கள். நாங்கள் உங்களுக்கு உறுதுணையாக இருப்போம் என அவருக்கு பதில் பதிவுகளைப் போட்டு தங்களது மதிப்பையும் தாங்கள் ஆளும் மாநிலத்தின் மதிப்பையும் தேசத்தைன் மதிப்பையும் ஒருசேர கெடுத்து வருகின்றனர். கர்நாடக அரசும்கூட இப்படிப்பட்ட பதிவு ஒன்றை போட்டு, பிறகு அது தவறென தெரிந்துகொண்டு அதனை நீக்கியது.