ஜி தமிழ் தொலைக்காட்சி சேனலில், குழந்தைகள் சம்பந்தமான நசைச்சுவை ரியாலிட்டி ஷோ என்ற பெயரில் பிரதமர் மோடியை கொக்சைப்படுத்தும் வகையில் நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டது. இதற்கு பா.ஜ.கவினர், பொதுமக்கள், ஹிந்து அமைப்புகள் என பல தரப்பில் இருந்தும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. மத்திய இணையமைச்சர் எல். முருகன், ஜீ தமிழ் தொலைக்காட்சி நிர்வாகியிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, தனது கண்டனத்தை பதிவு செய்தார். பிரதமரை கொச்சைப்படுத்திய அத்தொலைக்காட்சி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்தார். பா.ஜ.க. மாநிலத் தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட பா.ஜ.க. நிர்வாகிகளும் தங்களது கண்டனத்தை பதிவு செய்துள்ளனர். 10 வயதே நிரம்பிய அந்த சிறார்களுக்கு நிச்சயமாக அவர்கள் பேசியதன் அர்த்தம் தெரிந்திருக்காது. ஆனால், அந்த குழந்தைகளை வைத்து குறிப்பிட்ட தொலைக்காட்சியும் அந்நிகழ்ச்சித் தயாரிப்பாளர்களும், அதில் நீதிபதியாக பங்கேற்றவர்களும் உள்நோக்கத்துடன் கருத்து சுதந்திரம் என்ற பெயரில் மக்களிடம் தவறான தகவல்களை பரப்பியுள்ளனர். விஷத்தை கக்கியுள்ளனர். இதனால் அவர்கள் சட்டப்படி தண்டிக்கப்பட வேண்டும் என்று சமூக ஊடகத்தில் மக்கள் கருத்து பதிவிட்டு வருகின்றனர். இதனிடையே, ஜி தமிழ் தொலைக்காட்சி நிர்வாகம் மற்றும் நிகழ்ச்சி தொகுப்பாளர்கள் என அனைவரும் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும், இந்நிகழ்ச்சிக்கு காரணமானவர்களை உடனே பணி நீக்கம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி ஜி நெட்வொர்க்கின் தலைமை நிர்வாக அதிகாரி சிஜூ பிரபாகரனுக்கு தமிழக பா.ஜ.க சார்பில் கடிதம் ஒன்று எழுதப்பட்டுள்ளது.