பயோ உப்பு

மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தில் விஞ்ஞானியாக பணிபுரிந்து ஓய்வு பெற்ற, வேங்கைவாசலைச் சேர்ந்த அப்துல் ரகுமான் என்பவர், தமிழக கடலோர பகுதிகளில் அதிகமாகக் கிடைகும் கிரேசிலேரியா, கபாபைகஸ் எனும் கடற்பாசிகளையும், உப்பளங்களோரம் வளரும், சாலிகார்னியா எனும் தாவரத்தையும் வைத்து ‘பயோ உப்பை’ கண்டுபிடித்துள்ளார். சைவ முறையில் தயாரிக்கப்படும் இந்த உப்பை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து வயதினரும் பயன்படுத்தலாம்.நீரிழிவு, இதய நோய், உடல் பருமன் உட்பட பல நோய்களால் பாதிக்கப்பட்டோர் இந்த உப்பை பயன்படுத்துவதால் அவற்ரில் இருந்து விரைவில் குணமாகும் வாய்ப்புள்ளது என தெரிவித்துள்ளார்.