தாய்மதம் திரும்பிய பெண் கலைஞர்

கேரளாவின் மலப்புரத்தில் வள்ளுவம்பிரம் கிராமத்தை சேர்ந்த முஸ்லீம் பெண் மான்சியா விபி. மலப்புர மாவட்டம் முஸ்லிம்கள் அதிகமாக வாழும் பகுதி. அதிலும், வள்ளுவம்பிரம் கிராமம் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தானுக்கு கொஞ்சமும் குறைந்தது அல்ல. அங்கு ஹிந்துக்கள் அதிகம் கிடையாது. அப்படி இருந்தாலும் அவர்கள் அடக்கப்பட்டு ஒடுக்கப்படுகிறார்கள். சுதந்திரமாக சிந்திக்கும் முஸ்லிம்களின் கதி இன்னும் மோசம்.

இந்த பகுதியில் பிறந்து வளர்ந்த இவர்,தனது தாய் தந்தையின் விருப்பப்படி இவரும் மான்சியாவும் அவரது சகோதரியும் பாரதத்தின் பாரம்பரிய நடனங்களான பரதநாட்டியம், குச்சிப்புடி, மோகினியாட்டம் உள்ளிட்டவற்றை கற்றனர். இதனால், இவர்களது குடும்பம் அப்பகுதி முஸ்லிம்களால் ஒதுக்கி வைக்கப்பட்டது. கடும் இன்னல்கள், வறுமையை சந்தித்தனர். இவரது தாய் புற்று நோயால் போராடியபோது யாரும் உதவவில்லை. அவர் இறந்தபோது இடுகாடும் மறுக்கப்பட்டது.

மான்சியா தற்போது தனியாக ஒரு நடனப்பள்ளி தொடங்கி நடத்தி வருகிறார். அவரது மூத்த சகோதரி ரூபியா லக்னோ பல்கலைக் கழகத்தில் பரதநாட்டிய விரிவுரையாளராக உள்ளார். இவர்கள், மயிலாப்பூர் கோயில் குருவாயூர் கிருஷ்ணர் கோயில் உள்ளிட்ட பல கோயில்களிலும் நடன நிகழ்ச்சிகள் நடத்தியுள்ளனர். இதனால், இவர்களை முஸ்லிம்கள் பலமுறை தாக்கியுள்ளனர். கொலை மிரட்டலும் வந்துகொண்டுள்ளது.

இப்போது மான்சியா, ஷியாம் கல்யாண் என்ற இசைக்கலைஞரை இரு குடும்பத்தினரின் ஆசீர்வாதத்துடன் திருமணம் செய்து கொண்டு ஹிந்துவாக மாறியுள்ளார். தன்னை எதிர்த்து ஒடுக்கிய அந்த முஸ்லிம்களுக்கு மான்சியா நன்றி தெரிவித்துள்ளார். அவர்களது தொடர் எதிர்ப்பினால்தான் நான் உத்வேகம் பெற்று, எனது அர்ப்பணிப்பை அதிகரிக்கவும், கனவுகளை நனவாக்கவும் முடிந்தது என்றார்.

சமீபத்தில் கேரளாவைச் சேர்ந்த சபீனா லத்தீஃப் என்ற மற்றொரு கலைஞரும் மான்சியாவைப் போலவே தனது வேர்களுக்குத் திரும்பியுள்ளார்.