சித்தார்த்தின் தரம்

பஞ்சாப்பில் பிரதமர் மோடியின் பாதுகாப்பில் செய்யப்பட்ட மாபெரும் பாதுகாப்பு குறைபாடுகள் உலகையே அதிர்ச்சியில் ஆழ்த்தின. இதுகுறித்து தனது டுவிட்டரில் கருத்துத் தெரிவித்த பாரத பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால், ‘பிரதமரின் பாதுகாப்பில் சமரசம் செய்து கொண்டால், எந்த ஒரு நாடும் பாதுகாப்பாக இருந்துவிட முடியாது’ என்று குறிப்பிட்டிருந்தார். அவரது இந்தப் பதிவுக்கு நடிகர் சித்தார்த் ஆபாசமான வார்த்தைகளால் பதில் அளித்திருந்தார். அவரது பதிவுக்கு டுவிட்டரில் கண்டனங்கள் வலுத்து வருகின்றன. ‘இப்படிப்பட்டவர்களைதான் தி.மு.க பாதுகாத்து ஊக்கப்படுத்துகிறது என்றால் இதை தி.மு.க நோக்கமாகவும் பார்க்கிறேன்.’ என காயத்ரி ரகுராம் கருத்து பதிவிட்டார். தேசிய மகளிர் ஆணையம், நடிகர் சித்தார்த் மீது இந்திய குற்றவியல் சட்ட பிரிவு 354 ஏ (பாலியல் துன்புறுத்தல்) மற்றும் ஐ.டி சட்டத்தின் பிரிவு 67 (ஆபாசமான விஷயங்களை வெளியிடுதல்) ஆகியவற்றின் கீழ் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யுமாறு மகாராஷ்டிரா டி.ஜி.பிக்கு கடிதம் எழுதியுள்ளது. இதனையடுத்து வழக்கம்போல பின்வாங்கிய சித்தார்த், ‘தனது பதில் தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது’ என டுவீட் செய்துள்ளார்.