பட்நாயக்கிற்கு வி.ஹெச்.பி கண்டனம்

தெரசா துவக்கிய மிஷனரிஸ் ஆஃப் சேரிட்டி அமைப்பின் ஆதரவற்றோர் விடுதியில் உள்ள பெண்கள், கிறிஸ்தவ மத புத்தகங்களை படிக்கவும் பிரார்த்தனைகளில் பங்கேற்கவும் கட்டாயப்படுத்தப்பட்டனர். பலரை அந்த மிஷனரி மதமாற்றம் செய்துள்ளது. இதனால் அந்த அமைப்பின் மீது விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

வெளிநாட்டு நிதி சார் பிரச்சனைகளும் கண்டறியப்பட்டதால் அந்த அமைப்பே தனது எப்.சி.ஆர்.ஏ உரிமத்தை நிறுத்திவைக்க கோரியது. தற்போது அதன் உரிமம் மீண்டும் புதுப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஒடிசாவின் நவீன் பட்நாயக் தலைமையிலான அரசு, மிஷனரிஸ் ஆஃப் சேரிட்டிக்கு 79 லட்சம் ரூபாயை முதலமைச்சர் நிவாரண நிதியில் இருந்து மானியமாக வழங்கியுள்ளது.

இந்த ஒருதலைப்பட்சமான நடவடிக்கையை விஷ்வ ஹிந்து பரிஷத் (வி.ஹெச்.பி) அமைப்பு கண்டித்துள்ளது. இதுகுறித்து வி.ஹெச்.பியின் மத்திய பொதுச் செயலாளர் மிலிந்த் பரண்டே கூறுகையில், ‘சுவாமி லக்ஷ்மணானந்த சரஸ்வதி கொல்லப்பட்டு 10 ஆண்டுகளுக்கு மேலாகிறது. ஆனால் ஒடிசா அரசு இதுவரை குற்றவாளிகளைக் கண்டுபிடிக்கவில்லை. அவரது கொலையில் கிறிஸ்தவ மிஷனரிகள் ஈடுபட்டுள்ளன என்று பல ஆதாரங்கள் வெளியாகியுள்ளன.

ஒடிசாவின் 3 சதவீத கிறிஸ்தவ மக்களை திருப்திப்படுத்த முனைந்துள்ள ஒடிசா அரசு, 97 சதவீத ஹிந்துக்களின் நலன்களை புறக்கணிக்கிறது. கொரோனா பொதுமுடக்கம் காரணமாக, ஆயிரக்கணக்கான பூஜாரிகள் வறுமையில் உள்ளனர், பல மடங்கள் கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளன. பல ஆதரவற்றோர் இல்லங்கள், விதவை ஆசிரமங்கள், முதியோர் இல்லங்களும் கடுமையான நிதி நெருக்கடியில் உள்ளன. ஆனால் நவீன் பட்நாயக் இவர்களுக்கு எந்த நிவாரணமும் வழங்கவில்லை. நெருக்கடிகளைத் தணிக்கவில்லை.

இவை பட்நாயக்கின் ஹிந்து விரோத மனப்பான்மையையே காட்டுகிறது. உலகம் முழுவதும் நடக்கும் மதமாற்றங்கள் குறித்து மகாத்மா காந்தி கூட ‘ஹரிஜன்’ இதழில் தனது கவலையை வெளிப்படுத்தினார். ஆனால், மிஷனரிஸ் ஆஃப் சேரிட்டி அமைப்பு பலரை மதம் மாற்றி வருவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது’ என தெரிவித்தார்.