தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதை அடுத்து, வெள்ளி, சனி ஞாயிற்றுக் கிழமைகளில் அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும் பொதுமக்கள் வழிபாட்டுக்கு தடைவிதித்து தமிழக அரசு அறிவுறுத்தி உள்ளது. இந்நிலையில், பழனி காந்தி ரோடு பகுதியில் உள்ள பள்ளிவாசலின் முன்வாசலை அடைத்துவிட்டு பின்வாசல் வழியாக சென்ற ஏராளமான முஸ்லிம்கள் அங்கு சட்டத்தை மீறி தொழுகை நடத்தினர். இதுகுறித்த புகாரின் பேரில் அங்கு சென்ற காவல்துறையினர் அவர்களை எச்சரித்து வெளியே அனுப்பினர். ஆனால், அவர்கள் மீது எந்த வழக்கும் பதியப்படவில்லை. கடந்த கொரோனா 2வது அலை பொதுமுடக்கத்தின்போதும் தமிழகத்தின் பல இடங்களில் முஸ்ளிம்களும் கிறிஸ்தவர்களும் சட்டத்தையும் தடையையும் மீறி தங்கள் வழிபாட்டுத் தலங்களில் வழிபாடு நடத்தினர். அதனை தமிழக அரசும் காவல்துறையும் கண்டும் காணாமலும் இருந்தன. ஆனால், அதேசமயத்தில் ஹிந்து வழிபாட்டுத் தலங்களில் மட்டும் அதிக கெடுபிடிகள் காட்டின என்பது குறிப்பிடத்தக்கது.