பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டம்

கேரளாவில் சமீபகாலமாக, பயங்கரவாத நடவடிக்கைகள் அதிகரித்து வருகின்றன. அன்னிய சக்திகளின் உதவியுடன் மாநிலத்தில் பல மத அடிப்படைவாத அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன. இதனை அம்மாநில அரசும் கண்டுகொள்வதில்லை. இதனையடுத்து, பயங்கரவாதத்துக்கு எதிராகவும், பயங்கரவாதிகளுக்கு அரசு ஆதரவு அளிப்பதை கண்டித்தும் கேரளா மாநிலம் முழுவதும் 250க்கும் மேற்பட்ட இடங்களில் ஊர்வலங்கள் நடைபெற்றன. கேரளாவின் அனைத்து பகுதிகளிலும் நடைபெற்ற இப்போராட்டங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் திரளாகக் கலந்துகொண்டனர். சமீபத்தில் நடைபெற்ற ரஞ்சித் ஸ்ரீனிவாசன், சஜித், நந்து கிருஷ்ணா, பிஜு ஆகியோரின் கொலைகளுக்கு எதிரான பொதுமக்களின் கோபத்தை இந்த போராட்டங்கள் வெளிப்படுத்தின. இப்போராட்டங்கள் குறித்த பயங்கரவாத அமைப்புகளின் பயமுறுத்தல், இடதுசாரி ஊடகங்களின் பொய்ப் பிரச்சாரங்கள் ஆகியவற்றை புறக்கணித்து பெண்கள் உட்பட ஆயிரக்கணக்கானோர் இதில் கலந்துகொண்டனர். பயங்கரவாத மையங்கள் என்று காவல்துறை முத்திரை குத்தப்பட்ட சில இடங்கள் வழியாகவும் ஊர்வலங்கள் நடத்தப்பட்டன. பொதுமக்களின் கோபத்தை அரசு புரிந்து கொள்ள வேண்டும் என ஹிந்து ஐக்கியவேதி அமைப்பு தெரிவித்துள்ளது.