பா.ஜ.க தலைவர் விடுவிப்பு

தெலுங்கானாவில் அரசு ஊழியர்களுக்கு எதிராக செயல்பட்டு வரும் சந்திரசேகர ராவ் தலைமையிலான அரசை கண்டித்தும், அரசு ஊழியர்களின் இடமாற்றம் தொடர்பான அரசாணை 317ஐ திருத்தக் கோரியும் தெலுங்கானா பா.ஜ.க தலைவர் பண்டி சஞ்சய் குமார், தனது அலுவலகத்தில் ‘ஜாகரண தீக்ஷா’ என்ற கூட்டம் நடத்தவிருந்தார். இதனையடுத்து கொரோனா வழிகாட்டுதலை மீறியதாக அவரையும் அங்கிருந்தத் தொண்டர்களையும் மூர்கமாகத் தாக்கி கைது செய்தது காவல்துறை. அவருக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டது. இந்நிலையில் அவரது ஜாமீன் மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், சஞ்சயை தனிப்பட்ட ஜாமீனில் விடுவிக்க உத்தரவிட்டது. மேலும், இரவு 10.50 மணிக்கு சஞ்சய் கைது செய்யப்பட்டு 11.15 மணிக்கு முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டதைக் சுட்டிக்காட்டிய நீதிமன்றம், இவ்வளவு குறுகிய காலத்தில் எப்படி எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டது, கீழமை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட ரிமாண்ட் அறிக்கையில் காவலர்களுக்கு காயங்கள் ஏற்பட்டதாக எந்த மருத்துவ அறிக்கையும் சமர்ப்பிக்கப்படாதபோது, இ.பி.கோ பிரிவு 333 (அரசு ஊழியருக்கு காயம் ஏற்படுத்துதல்) எப்.ஐ.ஆரில் ஏன் சேர்க்கப்பட்டது? என்று கேள்வி எழுப்பியது.