கொரோனா வைரசின் ஓமிக்ரான் மாறுபாடு டெல்டா மாறுபாட்டைவிட குறைவான கடுமை கொண்டதாக உள்ளது. ஆனால் இது லேசான வகை என்று வகைப்படுத்தப்பட வேண்டும் என்று அர்த்தமல்ல. ஒமிக்ரான் மாறுபாடு மக்களை மருத்துவமனையில் சேருமளவுக்கு கொண்டு செல்கிறது. டெல்டாவைப் போலவே இது மக்களைக் கொல்லவும் செய்கிறது. இது சுனாமி போல கொரோனா பாதிப்பு எண்ணிக்கை விரைவாக பரப்புகிறது. மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன, சுகாதாரப் பணியாளர்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இது உலகளாவிய பொருளாதார மீட்சியை மீண்டும் குறைக்கலாம். உலக அளவில் உள்ள சுகாதார சமத்துவமின்மை, தடுப்பூசி ஏற்றத்தாழ்வுகள் பெரும் பிரச்சனைக்கு வழிவகுக்கும் என உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் ஜெனரல் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் கூறியுள்ளார்.