சிக்கிய தி.மு.க கொள்ளையன்

திருப்பூரைச் சேர்ந்தவர் குமார் என்ற தொழிலதிபரிடம், சென்னை திரு.வி.க நகர் தி.மு.க பகுதி பிரதிநிதியான நம்மாழ்வார்பேட்டையைச் சேர்ந்த சங்கர் அறிமுகம் ஆனார். குமாரிடம் இருந்த 5 கோடி ரூபாய் கறுப்பு பணத்தை, வெள்ளையாக மாற்றி தருவதாக கூறிய சங்கர், முதல்கட்டமாக 1 கோடி ரூபாய் பணத்துடன் சென்னை வரவழைத்துள்ளார். அண்ணா நகர் சாந்தி காலனியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணத்தை மாற்றுவதாகக்கூறி அழைத்துச் சென்றார். அண்ணா நகர், நியூ ஆவடி சாலை சந்திப்பில் சங்கரும், குமாரும் காத்திருந்தனர். அப்போது அங்கு வந்த 10 பேர் கொண்ட கும்பல், குமாரின் பணப்பையை பறிக்க முயற்சித்தனர். குமார் கூச்சலிட்டதால் கொள்ளைக் கும்பலுடன் சேர்ந்து சங்கரும் தப்பி ஓடினார். அங்கிருந்த மக்கள் சங்கரை விரட்டிப் பிடித்தனர். அண்ணா நகர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். விசாரணையில், தி.மு.கவை சேர்ந்த சங்கரும் அவரது கூட்டளி விஜய்குமாரும் சேர்ந்து குமாரிடம் இருந்த 1 கோடி ரூபாய் பணத்தை அபகரிக்க திட்டமிட்டது தெரிய வந்தது. இதனையடுத்து அந்த தி.மு.க பிரமுகர் கைது செய்யப்பட்டார்.