செங்கல்பட்டு மாவட்டம் அச்சரப்பாக்கம் ஒன்றியத்தில் முருங்கை கிராம ஏரியின் நீர்பிடிப்பு பகுதியில் இம்மாதம் 2ம் தேதி குட்டை அமைக்கும் பணி ஜே.சி.பி இயந்திரம் மூலம் நடைபெற்றது. தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் பணியாளர்களால் செய்யப்பட வேண்டிய இப்பணியை ஜே.சி.பி இயந்திரம் மூலம் மேற்கொள்ளப்பட்டதை அறிந்த 100 நாள் திட்ட பணியாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இச்செய்தியை அறிந்த தினமலர் நாளிதழ் நிருபர் மோகன் அங்கு சென்று செய்தி சேகரித்து, புகைப்படம் எடுத்துச் சென்றார். இதையறிந்த முருங்கை ஊராட்சி தலைவரின் மகன், மாமனார் மற்றும் திமுகவினர் 100 அடியாட்கள் நிருபரின் வீட்டிற்கு சென்று அவரது பெற்றோருக்கு கொலை மிரட்டல் விடுத்து ஆபாச வார்த்தைகளால் திட்டினர். இதுகுறித்து பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில், காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். இதனால் மேலும் ஆத்திரமடைந்த ஊராட்சி தலைவரின் குடும்பத்தினர் மீண்டும் நிருபரின் வீட்டிற்கு சென்று ,சிறுநீரக அறுவை சிகிச்சை செய்துள்ள நிருபரின் தந்தையை வயிற்றில் உதைத்து, நிருபரின் தாயின் தலைமுடியை பிடித்து இழுத்து கொலைவெறி தாக்குதல் நடத்தி உள்ளனர். தி.மு.க ரௌடிகளின் இந்த காட்டுமிராண்டித்தனமான கொலைவெறி தாக்குதலுக்கு பா.ஜ.க, அ.தி.மு.க உள்ளிட்ட கட்சிகளும் பல்வேறு அமைப்புகளும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. இச்செயலில் ஈடுபட்ட தி.மு.க ரௌடிகள் மீது கொலைமுயற்சி வழக்கு பதிந்து கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர். முதல்வரும் டி.ஜி.பியும் நடவடிக்கை எடுப்பார்களா?