தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாக பொங்கல் பரிசுத் தொகுப்போடு, பணப்பரிசையும் கடந்த அ.தி.மு.க அரசு வழங்கி வந்தது. கடந்த ஆண்டு கொரோனா ஊரடங்கு காரணமாக வாழ்வாதாரம் இழந்து தவித்த மக்களுக்கு ரூ. 2,500 வழங்கப்பட்டது. அப்போது, ரூ. 5,000 வழங்க வேண்டும் என கூப்பாடு போட்டவர்கள் தி.மு.க தலைவர்கள். அதனால், இந்த ஆண்டு பொங்கல் பணப்பரிசை எதிர்நோக்கி மக்கள் காத்திருந்தனர். ஆனால், மழை வெள்ள நிவாரணமும் வழங்காமல், பொங்கல் பரிசுப் பணமும் தராமல் மக்களை ஏமாற்றிய முதல்வர் ஸ்டாலின், ரேசன் அட்டைக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு மட்டும்தான் வழங்கப்படும் என்று கூறி தமிழக மக்களுக்கு ஏமாற்றத்தையும் அதிர்ச்சியையும் அளித்தார். மேலும், அவர் அறிவித்த பொங்கல் பரிசுத் தொகுப்பில் பலருக்கும் 21 பொருட்கள் வழங்கப்படவில்லை. சில இடங்களில் குட்டையான கரும்புகள் வழங்கப்பட்டன. அப்பாவி தமிழனை மொழியின் பெயரால் ஏமாற்றும் தி.மு.க பொங்கல் பரிசு பொருள் கொள்முதலில் அனைத்து பொருட்களையும் வடமாநில கம்பெனிகளிடமிருந்து வாங்கியுள்ளது. தங்களது பைகளை நிரப்பிக்கொள்ள அதிகாரிகளுக்கு துணைபோயுள்ளது.
பல பொருட்கள் தரமற்று இருந்தன. இது ‘வெந்த புண்ணில் வேலை பாய்ச்சியதை’போல மக்களுக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
உதாரணமாக, நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள ரேஷன் கடை ஒன்றில், பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்டத்தை அப்பகுதி திமுக நிர்வாகிகள் தொடங்கி வைத்தனர். அப்போது, பொங்கல் பரிசுத் தொகை எங்கே? என்று அங்கிருந்த பெண்கள் கேள்வியை எழுப்பினர். இதனால், தி.மு.க நிர்வாகிகள் சிலர் அங்கிருந்து நழுவினர். ஒரு உடன்பிறப்பு மட்டும் பெண்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். ‘அதுதான் ஓட்டுக்கு 2,000 ரூபாய் கொடுத்துவிட்டோமே, பிறகு என்ன? என கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த பெண் ஒருவர், ‘ஒட்டுக்கு கொடுத்தது பற்றி பேசவில்லை, இதற்கு முன்பாக பொங்கலுக்கு 2,500 தந்தார்கள், அதை நீங்கள் ஏன் தரவில்லை? என கேட்டார். மேலும், கொடுத்த பையில் 21 பொருட்களில் 18 தான் இருக்கிறது என அங்கு பெண்கள் கூறியதும் துண்டை காணோம் துணியை காணோம் என தி.மு.க நிர்வாகிகள் ஓட்டம் பிடித்தனர். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. கரும்புக்கு ரூ. 33 எனகூறி வாங்கிய கரும்பிலும் இடைத்தரகர்கள் கமிஷன் அடித்து விவசாயிகளுக்கு கரும்புக்கு ரூ. 10 மட்டுமே அளித்த செய்தியும் சமீபத்தில் வெளியானது குறிப்பிடத்தக்கது.