குஜராத்தில் உள்ள ‘பேட் துவாரகா’ ஸ்ரீ கிருஷ்ணர் குஜராத்தை ஆண்ட காலத்தில் அவரின் வசிப்பிடமாக இருந்தது. இது துவாரகா கடற்கரையில் உள்ள ஒரு சிறிய தீவு. இது ஹிந்துக்களின் புனித யாத்திரை தலங்களில் ஒன்று. 1980களில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சியில் பண்டைய நாகரீகம் இங்கு இருந்தது நிரூபிக்கப்பட்டது. இந்த சிறிய தீவில் சுமார் 7,000 குடும்பங்கள் வசிக்கின்றன. ஆனால் அதில் 6,000 முஸ்லிம் குடும்பங்கள். ஹிந்து புனித யாத்திரை தலங்களையும் சுற்றி ஆக்கிரமிக்கும் முஸ்லிம்களின் திட்டத்தில் பேட் துவாரகாவும் தப்பவில்லை. இந்நிலையில், இரண்டு பேட் துவாரகா தீவுகளுக்கு உரிமை கோரி வக்ஃப் வாரியம் குஜராத் உயர் நீதிமன்றத்தை அணுகியுள்ளது. இந்த மனுவை விசாரிக்க மறுத்த உயர்நீதிமன்றம், தனது அதிருப்தியை வெளிப்படுத்தியது. “நீங்கள் என்ன சொல்கிறீர்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா? கிருஷ்ணநகரியில் உள்ள நிலத்துக்கு வக்ஃபு வாரியம் எப்படி உரிமை கோர முடியும்? உங்களது விண்ணப்பத்தை மீண்டும் படித்துப்பார்த்து திருத்தப்பட்ட விண்ணப்பத்தை நீதிமன்றத்தில் சமர்ப்பியுங்கள் எனக் கூறியது. வக்ஃப் வாரியம் எந்த ஒரு சொத்தையும் வக்ஃப் சொத்து என்று நம்பினால், அது வக்ஃப் சொத்து அல்ல என்பதை நிரூபிக்கும் பொறுப்பு சொத்து உரிமையாளரையே சார்ந்தது. இது மறைமுகமாக வக்ஃப் மூலம் நில அபகரிப்பை ஊக்குவிப்பதாக உள்ளதாகவே கருதப்படுகிறது.