மங்களூருவில் உள்ள பல்வேறு கோயில் வளாகங்களிலும் உண்டியல்களிலும் பயன்படுத்தப்பட்ட ஆணுறைகளை வீசியதாக காவல் நிலையங்களில் இதுவரை 5 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. சி.சி.டி.வி காட்சிகளைக் கொண்டு, காவல்துறை தீவிர விசாரணை மேற்கொண்டது. இதில், கிறிஸ்தவ மத வெறியரான தேவதாஸ் ஜான் தேசாய் என்பவர்தான் இதனை செய்தார் என்பதைக் கண்டறிந்து அவரை காவல்துறை கைது செய்தது.
விசாரணையில், அவர் தான் ஒரு தீவிர கிறிஸ்தவ மத வெறியன் என ஒப்புக்கொண்டார். மேலும், ‘எனது தந்தையின் காலத்திலிருந்தே எங்கள் குடும்பம் கிறிஸ்தவத்தை பின்பற்றி வருகிறது. பல வருடங்களுக்கு முன் மனைவி, குழந்தையை பிரிந்துவிட்டேன். ஏசுவின் செய்தியை பரப்புவதற்காக இப்படி செய்கிறேன். 15 வருடங்களாக நான் ஏசுவின் செய்தியைப் பரப்புகிறேன். தூய்மையற்ற இடங்களுக்கு அசுத்தமான பரிசுகள் வழங்கப்பட வேண்டும் என்பதால் நான் இப்படி செய்கிறேன்.. இதில் எனக்கு எந்த வருத்தமும் இல்லை என கூறியுள்ளார்.
மங்களூரு காவல் ஆணையர் சசி குமார் செய்தியாளர்களிடம் பேசுகையில், ‘தேசாய் எங்களின் அனைத்து கேள்விகளுக்கும் பதிலளித்தார். மனநலம் பாதிக்கப்பட்டவராகத் தெரியவில்லை என கூறினார். தேசாயின் வீட்டை சோதனையிட்டபோது, மற்ற மதங்களுக்கு எதிரான பொருட்கள் மீட்கப்பட்டன. பிரதமர் மோடி, அமித் ஷா, ஜே.பி.நட்டா உள்ளிட்ட பா.ஜ.க மூத்த தலைவர்களின் சிதைந்த உருவங்கள் அடங்கிய போஸ்டர்களை அவர் ரகசியமாக விநியோகித்து வந்ததும் கண்டறியப்பட்டது.