இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு இரவில் ஹிந்து கோயில்களை திறக்க வேண்டும் என ஹிந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அறிக்கை வெளியிட்டுள்ளார். கிறிஸ்தவ, ஆங்கில புத்தாண்டுக்கும் ஹிந்து கலச்சாரத்திற்கும் என்ன சம்பந்தம்? இது ஆகம விதிகளுக்கு முற்றிலும் முரணானது. தமிழ் புத்தாண்டு சித்திரை ஒன்று அன்றுதான் கொண்டாடப்படுவது வழக்கம். அதுதான் நமது பாரம்பரியம். ஹிந்து கலாச்சாரம், பாரம்பரியத்தை முற்றிலும் ஒழிக்க வேண்டும் என தி.மு.க அரசு செயல்பட்டு வருகிறது. அதனை சேகர்பாபு நிறைவேற்றி வருகிறார். அமைச்சர் சேகர்பாபு இந்த அறிவிப்பை உடனடியாக வபஸ் வாங்க வேண்டும். இல்லையெனில் இந்து முன்னணி இதனை ஹிந்துக்களிடம் கொண்டு செல்லும். ஆன்மீகப் பெரியோர், மடாதிபதிகளை ஒருங்கிணைத்து இதற்கெதிராக போராடும்’ என கூறியுள்ளார்.