மாலேகான் வழக்கில் திருப்பம்

மஹாராஷ்டிராவின் நாசிக் மாவட்டத்தில் உள்ள மாலேகான் என்ற இடத்தில், மசூதி அருகே கடந்த 2008ல் குண்டு வெடிப்பு நடந்தது. இதில் ஆறு பேர் பலியாகினர். 100க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். காங்கிரஸ் ஆட்சி காலத்தில் ‘ஹிந்து பயங்கரவாதம்’ என ஒன்று இருப்பதாக பொய்யாகக் கூறி, முஸ்லிம் பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களை திசைதிருப்ப ஜோடிக்கப்பட்டது இவ்வழக்கு. பா.ஜ.கவைச் சேர்ந்த பிரக்யா சிங் தாக்குர், ராணுவ அதிகாரி லெப்டினன்ட் கர்னல் பிரசாத் புரோஹித், ஓய்வு பெற்ற மேஜர் ரமேஷ் உபாத்யாய் உட்பட எட்டு பேர் மீது குற்றம் சாட்டப்பட்டு அவர்களை வெகுவாக கொடுமைப்படுத்தியது காங்கிரஸ் அரசு. உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், நான்கு ஆர்.எஸ்.எஸ் தலைவர்களுக்கு இவ்வழக்கில் தொடர்பு இருப்பதாக முன்பு என்.ஐ.ஏ’விடம் ஒருவர் சாட்சியம் அளித்து இருந்தார். மும்பை என்.ஐ.ஏ சிறப்பு நீதிமன்றத்தில், அவர் தனது வாக்குமூலத்தை திரும்ப பெற்றார். அப்போது அவர், இவ்விசாரித்த பயங்கரவாத தடுப்பு படையின் மூத்த அதிகாரி பரம்வீர் சிங் தன்னை மிரட்டி துன்புறுத்தி, வாக்குமூலம் வாங்கியதாக நீதிமன்றத்தில் தெரிவித்தார்.