புறக்கணிக்கப்பட்ட பழங்கால நீதிகள்

ஐதராபாத்தில் நடைபெற்ற அகில பாரதிய அதிவக்ட பரிஷத்தின் (ஏ.பி.ஏ.பி) 16வது தேசிய கௌன்சில் கூட்டத்தில் பேசிய நீதிபதி அப்துல் நசீர்,  நீதித்துறையை பாரதமயமாக்க வேண்டும். சிறந்த வழக்கறிஞர்களும் நீதிபதிகளும் பிறக்கவில்லை, உருவாக்கப்படுகின்றனர். மனு, கௌடில்யர், காத்யாயனர், பிரகஸ்பதி, நாரதர், யாக்யவல்கியர் உள்ளிட்ட பண்டைய பாரதத்தின் பிற சட்ட ஜாம்பவான்கள் முறையான கல்வி மற்றும் சிறந்த சட்ட மரபுகளை உருவாக்கி உள்ளனர். அவர்களின் சிறந்த அறிவை தொடர்ந்து புறக்கணிப்பதும், காலனித்துவ சட்ட அமைப்பை கடைபிடிப்பதும் நமது அரசியலமைப்பின் இலக்குகளுக்கும் நமது தேசிய நலனுக்கும் எதிரானது. இது காலத்தின் தேவை. பாரத சட்ட அமைப்பைப் புத்துயிர் பெறச் செய்து, ஒரு சிறந்த தேசத்தின் கலாச்சார, சமூக மற்றும் பாரம்பரிய அம்சங்களுடன் அதைச் சீரமைத்து, மேலும் வலுவாக உறுதிசெய்யும் முயற்சியாக இது இருக்கும். உலகிலேயே மிகப் பழமையான நீதித்துறையாகவும் உயர்ந்த மரபுவழிகளைக் கொண்டதாகவும் பாரதம் விளங்குகிறது. என தெரிவித்தார்.