36வது இந்திய பொறியியல் மாநாட்டின் நிறைவு நிகழ்ச்சியில் பேசிய மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், ‘உள்ளூர் மொழிகளிலும் தாய்மொழியிலும் கற்பிக்கப்படும் பொறியியல் கல்வி அதிகாரமளிக்கும் கருவியாக இருக்கும். அறிவியல் மனப்பான்மை மற்றும் வலுவான பொறியியல் திறன்களைக் கொண்ட மக்களின் பூமி நமது பாரதம். கட்டமைப்பு பொறியியல், நீர் மேலாண்மை, கடல்சார் பொறியியல் போன்ற அறிவியல் சான்றுகள் நமது நாகரிக வரலாற்றில் உள்ளன. தொலைநோக்கு மிக்க தேசியக் கல்விக் கொள்கை 2020ஐ நடைமுறைப்படுத்துவதன் மூலம், கல்வியை திறன்களுடன் ஒருங்கிணைத்து, பலதரப்பட்ட அணுகுமுறையை மேற்கொண்டு, 21ம் நூற்றாண்டிற்கு நமது இளைஞர்களை தயார்படுத்துகிறோம். புதிய கல்விக் கொள்கை 2020க்கு இணங்க உள்ளூர் மொழிகளிலும் தாய்மொழியிலும் பொறியியல் கல்வி என்பது நமது இளைஞர்களுக்கு அதிகாரமளிக்கும் கருவியாக இருப்பதோடு, நமது பொறியியல் திறனை மேலும் வலுப்படுத்தும்’ என கூறினார்.