மமதாவுக்கு பின்னடைவு

கோவாவில் சமீபத்தில் காங்கிரஸ் கூட்டணியை விட்டு வெளியேறி திருணமூல் காங்கிரஸ் கட்சிக்குத் தாவிய முன்னாள் கோவா சட்டமன்ற உறுப்பினர் லாவோ மம்லேதார், மற்றும் சுஜய் மல்லிக், ராம் மந்த்ரேக்கர், கோமல் பர்வார், கிஷோர் பர்வார் உள்ளிட்ட ஐந்து பேர் திருணமூல் காங்கிரஸ் கட்சியில் இருந்து வெளியேறி உள்ளனர். இதுகுறித்து அவர்கள் எழுதியுள்ள கடிதத்தில், ‘கோவாவிற்கும் கோவா மக்களுக்கு பிரகாசமான நாட்களைக் கொண்டு வருவார்கள் என்ற நம்பிக்கையுடன் நாங்கள் திருணமூல் கட்சியில் இணைந்தோம். ஆனால் அக்கட்சி கோவாவையும் கோவா மக்களையும் புரிந்து கொள்ளவில்லை. மக்களை மதரீதியாக பிளவுபடுத்துகிறது. கோவா மக்களை பிரிக்கும் முயற்சிக்கு நாங்கள் அனுமதிக்க மாட்டோம்.  தாங்கள் ஆளும் மேற்கு வங்கத்திலேயே பெண்கள் நிலையை மேம்படுத்துவதில் தவறிவிட்ட திரிணாமுல் காங்கிரஸ், கோவாவில் எதையும் பெரிதாக செய்யப்போவது இல்லை’ என தெரிவித்து உள்ளனர். மேலும், இதற்கு பிரசாந்த் கிஷோரின் ஐபேக் நிறுவனத்தை அவர்கள் பகிரங்கமாக குற்றம்சாட்டினர். ‘அவர்கள் கோவா மக்களை முட்டாளாக்குகிறார்கள், மாநில மக்கள் குறித்த புரிதல் அவர்களுக்கு இல்லை’ என்றும் கூறியுள்ளனர். விரைவில் கோவாவில் தேர்தல் நடைபெற உள்ள சூழலில், இது, மமதா பானர்ஜிக்கு பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது.