மகாராஷ்டிர மாநிலம் அவுரங்காபாத்தில் ஜல்னா மாவட்டம் மந்தாவில் வசிக்கும் 12 குடும்பங்களைச் சேர்ந்த 53 பேர் கிறிஸ்தவ மதத்தில் இருந்து தங்கள் தாய்மதமான ஹிந்து மதத்துக்கு மாறியுள்ளனர். இதற்கான சடங்குகளை ‘பைதான் பிராமண சபை’ ஏற்பாடு செய்தது. அவுரங்காபாத்தில் உள்ள பைதான் என்ற இடத்தில் உள்ள நாத் கோயிலில் அமைந்துள்ள ஏக்நாத் மகாராஜ் சமாதிக் கோயிலில் இதற்கான சடங்குகள் நடைபெற்றன. இந்த குடும்பங்களை ஹபாப் நத்வன்ஷாஜ் ராவ்சாஹேப் மகராஜ் கோசாவி மற்றும் கீர்த்தன் மகரிஷி பிரபுல்லபுவா தலேகோங்கர், நத்வன்ஷாஜ் ரகுநாத் மகாராஜ் கோசாவி ஆகியோர் வரவேற்றனர். இதைத்தவிர, மாந்தை தாலுகாவில் உள்ள 22 கிறிஸ்தவ குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 65 பேர் கிறிஸ்தவ மதத்தை கைவிட்டு தாய்மதம் திரும்ப விருப்பம் தெரிவித்து உள்ளனர். அதற்கான விழா வரும் ஜனவரி 5ம் தேதி இதே இடத்தில் நடைபெற உள்ளது.