ஆக்ராவில் அமைந்துள்ள டாக்டர் ஹெட்கேவார் ஆய்வு மையம், ஆர்.எஸ்.எஸ் அலுவலகத்திற்கு எதிரே ராதா கிருஷ்ணர் கோயில் உள்ளது. அங்கு சில முஸ்லிம்கள் அமர்ந்து மது அருந்திக்கொண்டும் ஆபாசமாக உரையாடி கொண்டும் இருந்தனர். இதைப்பார்த்த அங்கிருந்த ஆர்.எஸ்.எஸ் தொண்டர்கள் அவர்களை கோயிலில் அமர்ந்து மது அருந்த வேண்டாம் என்று கேட்டுக் கொண்டனர்.
இதனையடுத்து கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு, அங்கு திரண்ட சுமார் என்பதுக்கும் மேற்பட்ட முஸ்லிம் மதவெறி கும்பல் ஆக்ரா ஆர்.எஸ்.எஸ் அலுவலகத்தில் புகுந்து அங்குள்ளவர்களை கடுமையாகத் தாக்கினர். இதில், 13 ஸ்வயம்சேவகர்கள் காயமடைந்தனர். அவர்களில் விகாஸ் குப்தா மற்றும் சிவம் குமார் ஆகிய இருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். அலுவலக வளாகத்தில் இருந்த பாரத மாதா சிலையையும் கலவரக்காரர்கள் சேதப்படுத்தினர்.
தாக்குதல் பற்றிய தகவல் பரவியதும், ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் மீது நடந்த இந்த தாக்குதலை கண்டித்து பா.ஜ.க, ஆர்.எஸ்.எஸ், வி.எச்.பி தொண்டர்களுடன் பொதுமக்களும் போராட்டம் நடத்தினர். பா.ஜ.க சட்டமன்ற உறுப்பினர்கள் யோகேந்திர உபாத்யாய, மகேஷ் கோயல், புருஷோத்தம் கண்டேல்வால் ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்தனர். தாக்குதல் குறித்து உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. குற்றவாளிகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆக்ரா காவல் கண்காணிப்பாளர் சுதிர் குமார் உறுதியளித்தார்.