மதமாற்ற குற்றவாளிகள் கைது

குஜராத் மாநிலம், பரூச்சில் பரபரப்பாகப் பேசப்பட்ட வெகுஜன மத மாற்ற வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட யாகூப் இப்ராகிம் ஷங்கர், ரிஸ்வான் மெகபூப் படேல், தாகோர்பாய் கிர்தர்பாய் வாசவா, சாஜித் முகமது படேல் மற்றும் யூசுப் படேல், அயூப் பஷீர் பட்டேலாகிய 6 பேர் கைது செய்யப்பட்டனர். தலைமறைவாக உள்ள ஷபீர் பேக்கரிவாலா, சமாஜ் பேக்கரிவாலா, ஹசன் திஸ்லி மற்றும் இஸ்மாயில் அச்சோத்வாலா ஆகிய 4 பேர் முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்யக் கோரி குஜராத் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். இவர்கள் 2018ல் 37 பழங்குடியினக் குடும்பங்களை பணம், பொருள், வேலை, திருமணம் போன்ற வாக்குறுதிகளை அளித்து அவர்களை முஸ்லிம்களாக மதமாற்றம் செய்தனர். இதனை காரணம் காட்டி, வெளிநாடுகளில் இருந்து நன்கொடையாக 14 லட்சம் ரூபாயை முறைகேடாக வசூலித்துள்ளனர். மதமாற்ற நடவடிக்கைக்கு மாவட்ட ஆட்சியரிடம் அனுமதியும் பெறப்படவில்லை. இதைத்தவிர இவ்வாண்டு அக்டோபரில், வதோதரா நகர காவல்துறையின் சிறப்பு புலனாய்வுக் குழு (SIT), அமெரிக்க பாரத வம்சாவளி முஸ்லிம்கள் கூட்டமைப்பு (AFMI) ‘இடம்பெயர்ந்த’ வங்கதேசம் மற்றும் ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கு காஜியாபாத் அருகில் 400 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டுவது உள்ளிட்ட நடவடிக்கைகளுக்கு ஹவாலா நிதியை பெற்றதும் பாரத நேபாள எல்லைக்கு அருகில் மவுல்விகளுக்கு நிதியுதவி செய்ததையும் கண்டறிந்தது.