ராமப்பா கோயில் புனரமைப்பு

ஹைதரபாத்தில் அமைந்துள்ள 800 ஆண்டுகள் மிகவும் பழமையான ராமர் கோயில் புனரமைப்பு, மீட்புப் பணிகள் தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. இந்த பழமையான கோவில் யுனெஸ்கோ உலக பாரம்பரிய சின்னங்களில் ஒன்றாக இடம் பெற்றது. இதையடுத்து கோயிலை சுற்றி பார்ப்பதற்காக சுற்றுலா பயணிகள் வருகையும் அதிகரித்துள்ளது. சுற்றுலாத்துறையும் பெரிய அளவில் வளர்ச்சிப் பெற்று வருகிறது. தெலுங்கானா உயர் நீதிமன்றம் ராமப்பா கோயிலை ஒரு விரிவான பாதுகாப்பு மேலாண்மை திட்டத்தின் கீழ், ஐ.நா அமைப்பு வகுத்துள்ள விதிமுறைகளுக்கு இணங்கி புனரமைப்புப் பணிகளை மேற்கொள்ள கூறியதுடன், அதை கண்காணிக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளது. இந்நிலையில், மிகவும் பழமையான இந்தக் கோயில்கள் நீண்டகாலத்திற்கு உறுதியாக இருக்குமா? பாரம்பரியத்தை விட மக்கள் உயிர் முக்கியம் என்பது போன்ற சந்தேகங்களை அங்குள்ள சில அரசியல்வாதிக்ளும் சமூக செயற்பாட்டாளர்கள் என்ற முகமூடி அணிந்தவர்களும் திட்டமிட்டே எழுப்பி வருகின்றனர் என்பது வருத்தமளிக்கும் விஷயம்.