கோயில் நிலத்தை பயன்படுத்தக்கூடாது

ஹிந்து சமய அறநிலையத்துறையின் 2021 – 22ம் ஆண்டு மானியக் கோரிக்கையில், 10 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி நாமக்கல் மாவட்டம் சித்தலாந்தூரில் உள்ள ஆதனூரம்மன் கோயிலுக்கு சொந்தமான ஐந்து ஏக்கரை ஹிந்து சமய அறநிலையத்துறை கையகப்படுத்தியது. இதற்கு நீதிமன்றம் தடை விதிக்க வேண்டும், கோயில் நிலத்தை சன்னதி பயன்பாட்டுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று தமிழரசி தெய்வசிகாமணி என்ற பக்தர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். இதனை விசாரித்த நீதிமன்றம்,  ‘ஹிந்து சமய அறநிலையத்துறை கல்லூரிகள் தொடர்பான டிவிஷன் பெஞ்சின் சமீபத்திய இடைக்கால உத்தரவைக் குறிப்பிட்டு, ஹிந்து சமய அறநிலையத்துறை கல்லூரிகளை அமைக்க கோயில் நிலத்தைப் பயன்படுத்த முடியாது என்றும், ஏற்கனவே நிறுவப்பட்டவை நீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்பிற்கு உட்பட்டது’ என்றும் கூறியுள்ளது என்றார்.