மத்தியப் பிரதேசத்தின் சாகர் மாவட்டத்தில் உள்ள பராரு அருகே உள்ள ‘செயின்ட் பிரான்சிஸ் சேவதம்’ என்ற ஆதரவற்றோர் இல்லத்தில் தங்கியுள்ள ஹிந்து பட்டியலின பழங்குடியின குழந்தைகள் மாட்டிறைச்சி சாப்பிடவும், பைபிள் படிக்கவும் கட்டாயப்படுத்தப்பட்டனர். இதனை மறுப்பவர்கள், அவற்றை ஒப்புக் கொள்ளும் வரை கழுத்தை நெரித்தல், அடித்தல் உட்பட பல்வேறு வகைகளில் துன்புறுத்தப்பட்டனர். மேலும், அந்த இல்லத்தின் வளாகத்திற்குள் கால்நடைகள் வெட்டப்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அங்குள்ள குழந்தைகளின் உறவினர்கள் வந்து குழந்தைகளை சந்திக்கவும் அனுமதி மறுக்கப்பட்டது. அங்குள்ள ஒரு சிறுவனை சட்டப்போராட்டம் நடத்தி மீட்ட ஒரு தேஷ்ராஜ் என்ற அக்குழந்தையின் தந்தை, குழந்தையிடம் விசாரிக்கையில் இந்த உண்மை வெளிச்சத்திற்கு வந்தது. இதனையடுத்து, அவர் தேஷ்ராஜ் குழந்தைகள் நலக் குழுவில் புகார் அளித்தார். புகாரின் பேரில், 48 மணி நேரத்திற்குள் நடவடிக்கை எடுத்து அறிக்கை சமர்ப்பிக்கும்படி, தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் (என்.சி.பி.சி.ஆர்) அப்பகுதி காவல் ஆணையருக்கு உத்தரவிட்டுள்ளது.